1. கோயில் – பலர் பலவிதமான கவலை, துக்கம், வேண்டுதல்களோடு வருவர்.
2. பள்ளி – பாடம் பயிலும் இடம்
3. பொது இடம் – பலரும் கூடும் இடம். வீண் அரட்டை வேண்டாமே.
4. தொடர்வண்டி, பேருந்து – பயணத்தின் போது அனாவசிய பிரச்சினை எதற்கு. முடிந்தவரை புத்தகம் படிக்கலாம், வெளியில் வேடிக்கை பார்க்கலாம் அல்லது அமைதியாய் தூங்கலாம்.
5. வீடு மற்றும் அலுவலகம் – அமைதியை கடைபிடிப்பது நமக்கும் நல்லது நம்மை சார்ந்தவர்களுக்கும் நல்லது.
அதற்க்காக பேசவே வேண்டாம் என்றும் யாரும் சொல்வதில்லை. வீண் அரட்டைகள், மற்றவரை புண்படுத்தும் பேச்சுக்கள், வீண் விவாதங்கள் போன்றவற்றை தவிர்த்தால் நம் உடல் நலத்திர்க்கும் நல்லது. தொடர்வண்டி மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் போது தயவு கூர்ந்து நமது குடும்ப விவாதங்களை தவிர்ப்போம்.