சென்னை அரசு மருத்துவமனைக்கு செல்வோர் ( XYZ பிரிவில் மருத்துவம் பார்க்க செல்வோர்) கவனத்திற்கு. புறநோயாளிகளுக்கு அங்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மருந்து மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவர் ஒரு முறை எழுதி கொடுத்த சீட்டை நீங்கள் PHOTOCOPY எடுத்துதான் உபயோகிக்க வேண்டும். மருந்து சீட்டு புதியதாக தரப்படுவது இல்லை. கையில் PHOTOCOPY இல்லையெனில், ஏதோ செய்ய கூடாத தவறு செய்துவிட்டது போல் நோயாளிகள் மனம் நோகடிக்கப் படுகிறார்கள். பழைய சீட்டை வைத்து புதியதாக எழுதி கையொப்பமிட்டு தரலாமே? அல்லது மனம் நோகாமல் எடுத்து கூறலாமே.
மருந்து சீட்டு (PHOTOCOPY) எழுதி வாங்கியபின் மருந்தகத்தில் ஒரு பெரிய வரிசையில் நின்று COUNTER க்கு சென்றால் பாதி மருந்துக்கு மேல் STOCK இல்லை என்று திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். மருந்து சீட்டும் திரும்ப தரப்படுவதில்லை. குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் நோயாளிகள் நடத்தப்படுவது வேதனைக்குரிய விஷயம்.
STOCK இல்லை என்ற விஷயம் கூட தெரியாமல் மருந்துச்சீட்டு கொடுக்கும் மருத்துவரை நொந்துகொள்வதா? அல்லது சீட்டை வாங்கி வைத்துக்கொண்டு STOCK இல்லை என்று விரட்டும் PHARMASIST ஐ நொந்துகொள்வதா? என்று புரியாமல் "எல்லாம் விதி" என்று நொந்தபடியே வாயிலை நோக்கி நடையை கட்டும் நோயாளிகளை பார்க்கும் போது இதயம் கணக்கத்தான் செய்கிறது.
( இது யாரையும் புண்படுத்தும் நோக்கோடு எழுதப்படுவது அல்ல – புண்படுத்தி இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும் )