இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Thursday, April 7, 2011

மூன்றாவது கண் (என் கருத்து) :

இலவசம். இது இல்லாமல் இன்று எதுவுமே இல்லை. மன்னிக்கவும். எனது "இலவசம்" என்பதற்கு வேறு விளக்கம் உள்ளது. நீங்களாகவே வேறு ஏதேனும் கற்பனை செய்தால் நான் பொறுப்பல்ல. சரி. விஷயத்திற்கு வருவோம். போக்குவரத்து துறையில் பணிபுரிபவர்கள் பேருந்திலோ அல்லது தொடர்வண்டியிலோ இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்டம் இயற்றபட்டுள்ளதா என்பது நிச்சயமாக தெரியாது. ஆனால் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்வது சட்டப்படி குற்றம் என்பது தெரியும். ஆனாலும் அத்துறையில் பணிபுரிபவர்கள் யாரும் பயணசீட்டு எடுப்பதாக தெரியவில்லை. பணிக்கு செல்லும்போது EXEMPTION கொடுத்திருக்கலாம். ஆனால் கொடுத்த சலுகையை தவறாக பயன்படுத்துவது பற்றி அவர்கள் கவலை படுவது கூட கிடையது. அப்படியானால், மின்சாரத்துறையில் பணிபுரிவோர் மின்சாரத்தை இலவசமாய் அனுபவிக்கலாம் மற்றும் மற்ற துறைகளில் பணிபுரிவோர் அதை சார்ந்த சொத்துக்களை தன் சொத்தாக நினைத்து அனுபவிக்கலாம் போலிருக்கிறது. இது சரியா. இப்படியே போனால் நாளை சாமானிய மக்களுக்கென்று "ஏமாற்றம்" மட்டும் தான் சொத்தாக இருக்கும் போலிருக்கிறது. இது வெறும் எடுத்துக்காட்டு தான்.

 

நாம் மற்றவர்களை குறை சொல்லியே காலம் கடத்துகிறோம். (என்னையும் சேர்த்துதான்). SELF DISCIPLINE என்று ஒரு விஷயம் இருப்பதை நாம் ஏன் மறந்து போனோம். சலுகை என்று வந்தால் அதனை தவறாக உபயோகிக்காமல் அனைவரையும் சென்றடைய நாம் ஏன் உறுதுணையாக இருக்கக்கூடாது?

 

( இது யாரையும் புண்படுத்தும் நோக்கோடு எழுதப்படுவது அல்ல – புண்படுத்தி இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும் )