நம்மவர்களில் பலர் இ-சார்ஜ் செய்திருப்போம். அதற்கு நமது மொபைல் எண் தரவேண்டிவரும். அவ்வாறு தரும்போது privacy என்பது இல்லாமலே போகின்றது. எந்த ஒரு பெண்ணின் எண்ணையும் சுலபமாக பெறலாம். இதற்கு மாற்று வழி இருப்பதாகவும் தெரியவில்லை. இதை எந்தஒரு நிறுவனமும் சிந்தித்ததாக தெரியவில்லை. இன்றைய காலக்கட்டத்தில் ஆபாச SMS அனுப்புவதையே தொழிலாக கொண்டவர்கள் பலர். அவர்களுக்கு இந்த ரீசார்ஜ் முறையினால் நம்பரை தேடி அலையும் வேலை குறைகிறது. இவ்வளவு ஆபத்து இருந்தும் மக்கள் இதனை வரவேற்பதர்க்கு என்ன காரணம் என்றும் புரியவில்லை.