மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆம். அகிம்சை ஜெயித்துவிட்டது. "காந்தியவாதி அன்னாஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு மதிப்பளித்து, அவர் விரும்பிய வகையில் லோகபால் மசோதா பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் மனமோகன் சிங் உறுதி அளித்துள்ளார்" (நன்றி – தினமலர்) – இது நான் தினமலர் ONLINE இல் படித்தது.
ஒரு காந்தியவாதி நினைத்தால் எந்த ஒரு தீய சக்தியையும் அழித்துவிடமுடியும் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. கடந்த 5 நாட்களாக நாடு முழுவதும் ஒரு எண்ணம், ஒரே பேச்சு – ஊழல் எதிர்ப்பு. ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்து கடைபிடிக்க வேண்டிய ஒன்று.
லஞ்சம் வாங்கும் / கொடுக்கும் மற்றும் ஊழல் புரியும் குடிமகனும் – ஒரு இந்தியன் தான். அவனுக்கு ஏன் இல்லை நமது நாட்டை பற்றிய சிந்தனை? ஏன் இல்லை நமது சகோதரர்கள் என்ற அக்கறை? தான் / தனக்கு / தன்னை சார்ந்தோருக்கு மட்டும் என்று வாழும் போக்கு ஏன்?
லஞ்சம், ஊழல் என்பனவும் தேச துரோக செயல்களே. ஒவ்வொரு நாள் தொடங்கும் போதும் ஒரு சாதாரண இந்திய குடிமகனின் கவலை என்னவாக இருக்கமுடியும் ? இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு இந்தியனும் எதிர்நோக்கும் தேசிய பிரச்சினை என்னவாக இருக்க முடியும். அனைத்திற்கும் ஒரே பதில் - லஞ்சம் & ஊழல் தான்.
சமுதாய அக்கறை உள்ள ஒவ்வொரு இந்தியனும் சூளுரைப்போம். இனி லஞ்சம் கொடுப்பதில்லை என்று. கேட்கிறார்கள் கொடுக்கிறேன் என்று சப்பை கட்டி நாட்டின் முன்னேற்றதிற்கு பங்கம் விளைவிக்கும் முட்டாள்களை முட்டி தள்ளுவோம். கொடுக்காதே லஞ்சம். வளர்க்காதே ஊழல் பெருச்சாளிகளை என்று அகிம்சா வழியில் உறுதி எடுப்போம்.
பி.கு: வரதட்சணை என்பதும் ஒரு வகை லஞ்சமே.