சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பொது சிறுவயதில் படித்த பள்ளிகளை பற்றி பேச்சு வந்தது. அப்போது அவர் சொன்ன ஒரு 'குறும்பை' உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.நண்பர் எட்டாம் வகுப்பு படிக்கும் பொது அரையாண்டு தேர்வின் பொது வேறு சில காரணங்களால் சரியாக படிக்கவில்லை. வேறு என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நல்ல சினிமா பாடலை பத்து மதிப்பெண்கள் பகுதிக்கு எழுதி இருக்கிறார். தேர்வு முடிந்து விடுமுறை ஆரம்பமாக அனைவரும் மகிழ்ச்சியாக வெளியூர் சுற்ற கிளம்பிவிட்டனர்.
அரையாண்டு விடுமுறை கழிந்து பள்ளிக்கு சென்ற அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். அவரின் பாடலுக்கு ஆசிரியர் 10 மதிப்பெண்கள் இட்டிருந்தார். லேசாக அதிர்ச்சியுற்றவர் ஆசிரியரை வினவ, அவர் புண் சிரிப்புடன் " பாட்டு புத்தகம் வாங்கி சரிபார்த்தேன். ஒரு பிழையும் இல்லை. அதனால் தான் முழுமதிப்பெண்கள்" என்று கூற, வகுப்பில் ஒரே சிரிப்பலை. ஆனால் மற்றுமொருமுறை இவ்வாறு நிகழ்ந்தால் 10 மதிப்பெண்கள் கழிக்கப்படும் என்று பின்குறிப்பாக கூற மாணவர்கள் இன்னும் பெருங்குரலெடுத்து சிரிக்க அன்றைய தினம் மறக்க முடியாத ஒரு 'கல்வெட்டாக' அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பெற்றதாக அதே களிப்புடன் பகிர்ந்துகொண்டார்.